மருத்துவமும்..பலன்களும். தேக புஷ்டி லேகியம்

உடலுக்கு வலிமையை தரும் தேக புஷ்டி லேகியம் :" alt="" aria-hidden="true" />


உடல் வலிமையை அதிகரித்து பல நோய்களை குணமாகும் தேக புஷ்டி லேகியம் செய்முறை.


தேவையான பொருட்கள் :


1.பாதாம் – 100 கிராம்
2.முந்திரி – 100 கிராம்
3.பிஸ்தா – 100 கிராம்
4.கசகசா – 100 கிராம்
5.கற்கண்டு – 200 கிராம்
6.நெய் – 250 கிராம்
7.சோற்றுக்கற்றாழை – 200 கிராம்
8.பால் – அரை லிட்டர்


செய்முறை :


சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி நன்றாக கழுவி அரைத்து வைத்துக்கொள்ளவும். பாதாம், முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு சட்டியில் பாலை ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு கற்கண்டை போட்டு கிளறி கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள சோற்றுக்கற்றாழை, பாதாம், முந்திரி, பிஸ்தா, கசகசா ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறவும். பிறகு நெய் ஊற்றி 40 நிமிடங்கள் வரை கிளறவும். லேகியம் பக்குவமடையும் போது நெய் பிரிந்து வரும்போது இறக்கிவிடவும்.


பயன்படுத்தும் முறை :


நன்றாக ஆறியவுடன் பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் சிறியவர்களுக்கு அரை ஸ்பூன், பெரியவர்களுக்கு ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரவும். நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்துபவர்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.


பயன்கள் :


உடலுக்கு நல்ல வலிமையை தரும்.


இது உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி உண்டாக்கும்.


அனைத்து மூல நோய்களும் தீரும்.


நரம்பு தளர்ச்சி குணமாகும்.


மெலிந்த உடல் பலம் பெறும்.


ஆண்மை குறைவினால் ஏற்படும் குழந்தையின்மை கோளாறு நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.


வெட்டை நோய் குணமாகும்


Popular posts
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
Image
வட மாநில தொழிலாளர்களுக்கு 200 கிலோ அரிசி: ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் வழங்கினர்
Image
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்
Image
நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
Image